டெங்கு காய்ச்சலை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விசிக போராட்டம்…

 
Published : Oct 12, 2017, 07:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
டெங்கு காய்ச்சலை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விசிக போராட்டம்…

சுருக்கம்

Disease fight against dengue fever

திருவள்ளூர்

டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருவள்ளூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.

கருத்தியல் பிரிவு மாநில துணைச் செயலாளர் டி.ராஜகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் அரசியல் குழு மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, டெங்கு காய்ச்சலை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!