தமிழகத்தில் கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 26, 2022, 7:08 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் பி.எப்.7 என்ற புதிய வகை வைரஸ் சீனா மற்றும் பிற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியியிருந்தது. இதனிடையே தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: சுனாமி கோர முகத்தின் 18ம் ஆண்டு; பொதுமக்கள் அ ஞ்சலி

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்கள் ஆகியோருக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழு நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுகவினர் தொடர்ந்து கைது.. கரூரில் தொடரும் பதற்றம்.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சவால்!

ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்க வேண்டும். N95 முகக்கவசம், பிபிஇ கிட், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். வெண்டிலெட்டர்கள், சிபிஏபி கருவி, ஆக்சிஜன் செலுத்தும் கருவி உள்ளிட்டவை தயாராக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப திரவநிலை ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆக்சிஜனை பிரித்து அளிக்கக்கூடிய கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!