2ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள்... வெளியிட்டது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்!!

Published : Dec 26, 2022, 05:14 PM IST
2ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள்... வெளியிட்டது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்!!

சுருக்கம்

தமிழக காவல்துறையில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

தமிழக காவல்துறையில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான  2 ஆம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

இந்த நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 295 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

இந்த தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!