மகாகவி பாரதியின் பேத்தி மரணம்; முதல்வர் இரங்கல்

Published : Dec 26, 2022, 03:55 PM IST
மகாகவி பாரதியின் பேத்தி மரணம்; முதல்வர் இரங்கல்

சுருக்கம்

சிறந்த கவிஞரும், இசை ஆசிரியருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லதா பாரதியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். 

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகள்

மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான 
திருமதி லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற்றிவர் என்பதோடு, பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
திமுகவை காப்பி அடிக்கும் இபிஎஸ்.. திராவிட மாடல் ஆட்சி 2.0 கண்பார்ம்.. அமைச்சர் ரகுபதி விளாசல்..