
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படபிடிப்பின்போது படப்பிடிப்பு வாகனங்களை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக இயக்குனர் சங்கரின் மைத்துனர் பப்புவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவல்லிக்கேணி ஈஸ்வரதாஸ் சாலையில் ரஜினி நடிக்கும் 2.0 படப்படிப்பு நடைபெற்று வருகிறது. அவ்வழியே வந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் ரகு, பரத் ஆகியோரை அவ்வழியே விட முடியாது என்று பவுன்சர்களும், ஷங்கரின் மைத்துனர் பப்புவும் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று திரண்டு புகார் அளித்தனர்.
பின்னர் கொலைமிரட்டல், அசிங்கமாக திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பப்புவை கைது செய்தனர்.