
13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் காரைக்குடி கிளை தலைவர் வைரவன் தலைமை வகித்தார்.
இதில் சி.ஐ.டி.யூ. மண்டல பொதுச்செயலாளர் சிவக்குமார், ஐ.என்.டி.யூ.சி. மண்டல பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மண்டல பொதுச்செயலாளர் மனோகரன், ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் ஜெயராமன், கோவிந்தராஜன், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போக்குவரத்துக்கழக ஓய்வூதிய ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருகிற 28-ஆம் தேதி போக்குவரத்துக்கழக ஓய்வூதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கையான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை எப்போது நடைபெறும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.