
இயக்குநர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் ஒட்டியதாக கூறப்படுகிறது.
விகடன் விருது, அண்மையில் வழங்கப்பட்டது. சிறந்த படம், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் எழுத்தாளர்கள், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலாவும் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த விழாவில் திறமையில்லாதவர்கள் பலர் விருது பெற்றுள்ளனர் என்றார்.
அதேபோல தகுதி இல்லாத சிலருக்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாலா பேசியிருந்தார்.
பாலாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவர் யாரைக் குறிப்பிட்டு பேசியிருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இயக்குநர் பாலா, நடிகர் விஜய்யை மனதில் வைத்துதான் பேசியுள்ளதாக சமூக இணையதளங்களில் பரவியது.
இந்த நிலையில், இயக்குநர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஒட்டியதாக கூறப்படுகிறது. கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், எங்களைப் பகைச்சுக்கிட்டா இதுதான் நிலை என்று எழுதப்பட்டுள்ளது.
விகடன் விருது வழங்கும் விழாவில் பாலாவின் பேச்சில் கடுப்பான விஜய் ரசிகர்கள்தான், இந்த போஸ்டரை ஒட்டியதாக கூறப்படுகிறது. பாலாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.