2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணைக்கு ஆஜராக இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் அமீர் ஆஜரானார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு
போதைப்பொருட்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
undefined
இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தலில் தலைவனாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என தெரியவந்தது.இதனையடுத்து தலைமறைவான ஜாபர் சாதிக்கை ராஜஸ்தானில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துனர்.
ஜாபர் சாதிக் கைது
இதனையடுத்து ஜாபர்சாதிக் தயாரிப்பில் இயக்குனர் அமீர், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை எடுத்து வருகிறார். மேலும் ஜாபர் சாதிக் உடன் இணைந்து காபி ஷாப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டு பேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க என்சிபி,இயக்குனர் அமீருக்கு சம்மன் அளித்தது. அதன் படி இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலக்த்தில் இயக்குனர் அமீர் ஆஜரானார். இதே போல அமீர் உடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
விசாரணைக்கு ஆஜரான அமீர்
அவர்களும் இன்றைய விசாரணையில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள தொடர்பு மற்றும் பணம் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகே யார்.? யாருக்கு போதைப்பொருள் கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது என தெரியவரும்.
இதையும் படியுங்கள்