இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்யவிடாமல் ஒருநாள் முழுக்க அலையவிட்ட அவலம்; உறவினர்கள் போராட்டம்...

First Published Jan 2, 2018, 9:19 AM IST
Highlights
did not allow to burry dead woman body Relatives protest......


சிவகங்கை

சிவகங்கையில் இறந்த பெண்ணின் உடலை அடக்க செய்ய விடாமல் வெவ்வேறு பிரிவினர் மறுப்பு தெரிவித்ததால் உடலை வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க அலைந்த உறவினர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள வடக்கு இளைய ஆத்தங்குடியைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலை தெற்கு இளைய ஆத்தங்குடியைச் சேர்ந்த மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறொரு பிரிவினர் அங்கு முத்துலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய கூடாது என்று தடுத்துவிட்டனர். மேலும், உங்கள் பகுதியிலேயே அடக்கம் செய்து கொள்ளுமாறு கூறினர்.

இதனைத் தொடர்ந்து முத்துலட்சுமியின் உடலை வடக்கு இளைய ஆத்தங்குடிக்கு கொண்டு வந்தனர். ஆனால், இங்கும் அடக்கம் செய்ய வேறொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வேலுமணியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் உடலை கீழசெவல்பட்டி சாலையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சுமதி, துணை காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர்.

 

click me!