
சிவகங்கை
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில், ஏராளமான போட்டியாளர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், அண்ணாமலை நகரில் உள்ளது கீழ்பாத்தியம்மன் கோவில். இங்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைப்பெற்றது. இதில், ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு புது வருடத்தை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒருபகுதியாக சிவகங்கை இளையான்குடி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது.
இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து வந்திருந்தனர்.
இந்தப் பந்தயத்தில் பெரிய மாடுகள் 40 மாட்டு வண்டிகள், சின்ன மாடுகள் 23 மாட்டு வண்டிகள், நடு மாடு அளவில் 32 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாட்டு வண்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.