ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதி!

By SG Balan  |  First Published Mar 24, 2024, 4:58 PM IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை. வைகோ போட்டியிடுகிறார்.


ஈரோடு எம்பி கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

77 வயதான அ. கணேசமூர்த்தி ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக இருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Latest Videos

undefined

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை. வைகோ போட்டியிடுகிறார்.

உதயநிதியை வரவேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணப் பட்டுவாடா

இந்நிலையில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் கணேசமூர்த்திக்கு இன்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவை இழந்த நிலையில் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க, கோவையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு இவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றாரா என சந்தேகம் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படாதது மட்டுமின்றி, அதை முறையாக அவரிடம் தெரிவிக்கவில்லை என என வருத்தத்தில் இருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்காக சிறைக்குச் சென்று தியாகங்கள் செய்திருந்தபோதும் கட்சித் தலைமை உரிய மரியாதை தரவில்லை என்ற ஆதங்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் விஷ மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் எனவும் அதனால் மயக்கமடைந்து, சுயநினைவை இழந்திருக்கலாம் எனவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். ஆனால், இது குறித்து உறுதியான தகவல்  ஏதும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஈரோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசிங்கமான நிலையில் அயோத்தி ரயில் நிலையம்! துப்புரவு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்!

click me!