தேமுதிக அலுவலகத்திற்கு நாகப்பாம்பு ரூபத்தில் வந்தாரா விஜயகாந்த்? தொண்டர்கள் நெகிழ்ச்சி!

By SG BalanFirst Published Jun 19, 2024, 4:45 PM IST
Highlights

செவ்வாய்க்கிழமை விஜயகாந்தின் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் அவர் வரும் வழியிலேயே வந்த பாம்பு, அவர் அறைக்கும் சென்று சிறிது நேரம் கழித்து வெளியேறியுள்ளது. இதை பார்த்த தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மனம் உருகி கண்ணீர் சிந்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாகப்பாம்பு வந்துள்ளது. விஜயகாந்த் எந்த வழியாக அலுவலகத்துக்கு வருவாரோ அதே வழியில் வந்திருக்கிறது.

இதனால், இதனால் கேப்டனே நாகப்பாம்பு ரூபத்தில் கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் என்று தொண்டர்கள் மெய்சிலிர்ந்துப் போய்விட்டனர். பாம்பு அலுவலகத்திற்குள் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் நல்லடக்கம் செய்வதற்காக மாலையில் தேமுதிக கட்சி அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது வானத்தில் ஒரு கருடன் அவரது உடலை 3 முறை வட்டமிட்டுச் சென்றது. இதைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் வடித்தனர்.

திறப்பு விழாவுக்கு முன் இடிந்து விழுந்த பாலம்! தரமற்ற கட்டுமானத்தால் வீணாய் போன ரூ.12 கோடி!

*இன்று தலைமை கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை*

இன்று
(18/06/2024) செவ்வாய்க்கிழமை, தேமுதிக தலைமைக் கழத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, பின் அங்கிருந்து வெளியேறியது. செவ்வாய்க்கிழமையான இன்று தலைமைக் pic.twitter.com/8V4jk5eyAU

— Captain News (@captainnewstv)

அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை தொண்டர்கள் கேப்டன் கோயில் என்றே கூறுகிறார்கள். தினந்தோறும் அங்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாட்களில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பாம்பு ஒன்று வந்து சென்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விஜயகாந்தின் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் அவர் வரும் வழியிலேயே வந்த பாம்பு, அவர் அறைக்கும் சென்று சிறிது நேரம் கழித்து வெளியேறியுள்ளது. இதை பார்த்த தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மனம் உருகி கண்ணீர் சிந்தினர்.

விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சமாதியில் தினசரி வழிபாடுக்கு கூட்டம் கூட்டமாக வரும் தொண்டர்கள் மெய்சிலிர்ப்புடன் இந்தச் சம்பவம் பெற்றிப் பேசிக்கொள்கிறார்கள். கேப்டனே வந்து தன்னுடைய அறையை பார்த்துவிட்டுப் போகிறார் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.

அடேங்கப்பா! ஒரு படத்துக்கே இவ்ளோவா! கங்கனா ரனாவத், ஆலியா பட்டை முந்திய தீபிகா படுகோன்!

click me!