தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்... ரசிகர்களை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விருப்பம்!!

Published : May 08, 2023, 10:11 PM IST
தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்... ரசிகர்களை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விருப்பம்!!

சுருக்கம்

தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விளையாட்டுத் துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையின் செல்லப் பிள்ளை எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால்தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார்.

இதையும் படிங்க: பணமூட்டை இருக்கு! உண்மையான ஜெயலலிதா தொண்டர்களிடம் அதிமுக - டிடிவி தினகரன் சொன்னதை கவனிச்சீங்களா

தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் போல நானும் ஒரு தோனி ரசிகன் தான். தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் பல தோனிகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி, லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக விளங்குகிறார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளேன். பள்ளிகள் மற்றும் பொதுச் சமூகம் மூலம் விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து அரசு அவர்களுக்கு உதவி வருகிறது.

இதையும் படிங்க: சபரீசன் சந்திப்புக்கு காரணம் இதுதான்.. டிடிவி தினகரன் முன் உண்மையை உடைத்த ஓபிஎஸ்

இதில் முதன்மையானதாக முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பைப் போட்டிகளைச் சொல்லலாம். முதலமைச்சர் கோப்பை' என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை விளையாட்டுப் போட்டிகளில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் நோக்கத்தோடு இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கையில் பல மகத்தான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நீங்களும் அறிவீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!