நீதிமன்ற விசாரணைக்கு தனுஷ் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமாம் - மனு தாக்கல்.

 
Published : Mar 04, 2017, 07:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நீதிமன்ற விசாரணைக்கு தனுஷ் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமாம் - மனு தாக்கல்.

சுருக்கம்

Dhanush wants to be excused to attend trial - filed.

மேலூர்

மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் தனுஷுக்கு விலக்கு அளிக்கக வேண்டும் என்று தனுஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யபப்ட்டுள்ளது.  

மேலூர் தாலுகா மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன் (65). இவரது மனைவி மீனாள் என்ற மீனாம்பாள். இவர்கள், நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரை பல முறை சந்திக்க முயன்றும் முடியவில்லை என்றும், தாங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மாதம் தோறும் தங்களுக்கு ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க தனுஷுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த வழக்கை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை மருத்துவர்கள் குழுவினர் சரிபார்த்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மேலூர் தம்பதியினர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதன்பின்பு, மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனுஷ் மீதான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் – மீனாம்பாள் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் – மீனாம்பாள் தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜரானர்.

தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இருளப்பன், இந்த வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி அதற்கான உத்தரவு நகலைத் தாக்கல் செய்தார்.

இதன்பின்பு, மேலூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நடிகர் தனுஷ் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு செல்வக்குமார் ஒத்தி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..
டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி