
டெல்லிவாலாக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச உடல் பரிசோதனை… கெஜ்ரிவால் அதிரடி..
டெல்லியில் வசிப்பவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் இலவச சிகிச்சைக்கான ஒரு அறிவிப்பு அளிக்கப்பட்டது. இதில், இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்படி இலவச சிகிச்சை பெற ஒருவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் டெல்லியில் வசித்திருக்க வேண்டும் எனவும், அவர்களின் வருமான வரம்பு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த 2 நிபந்தனைகளையும் திடீரென விலக்கிக்கொண்ட அரசு இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த முக்கிய அறிவிப்பு டெல்லியில் மருத்துவ செலவு செய்ய முடியத ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதி 21 தனியார் பரிசோதனையகங்கள், 21 மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்காக அவர்கள் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தனியார் மருத்துவமனைகளில் காத்திருக்க நேரிட்டால், வேறு 41 மருத்துவமனைகளில் அதை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான தொகையை டெல்லி அரசு அவர்களுக்கு திருப்பி அளித்து விடும்' அறிவிக்கப்பட்டுள்ளது.