தமிழகத்தில் 10 உதவி போலீஸ் கமிஷனர்கள் திடீர் இடமாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !!

By Raghupati RFirst Published Mar 27, 2023, 9:52 AM IST
Highlights

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 10 உதவி கமிஷனர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.

தமிழகத்தில் 10 உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ். ராமசாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் எஸ். சம்பத் பாலன் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் கே. சரவணன் கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு டி. சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ். முருகராஜ் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த எம். சீனிவாசன் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.

இதையும் படிங்க..அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ஏ. கணேஷ்குமார் திருவள்ளூர் போலீஸ் பயிற்சி பள்ளியின் துணை முதல்வராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம். சீனிவாசன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், வீராபுரம் தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம். புருஷோத்தமன் பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டண்ட் ஜெ. பிரதாப் பிரேம் குமார் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

click me!