டிஜிபி ராஜேந்திரன் கூட ஒன்னும் செய்ய முடியல....சசிகலா புஷ்பா தாறுமாறு..!

By thenmozhi gFirst Published Sep 19, 2018, 7:22 PM IST
Highlights

சசிகலா புஷ்பா தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட பதிவுகளை பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் நீக்க  வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. 

சசிகலா புஷ்பா தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட பதிவுகளை பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா அவருக்கு கிடைத்த தீர்ப்பு பற்றி பேசினார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு, சசிகலா புஷ்பாவின் மார்ப்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படங்கள் முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என கூறி, அதை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு வழக்கை தொடர்ந்தார்.

அந்த வழக்கில்,கடந்த 2016 செப்டம்பர் மாதம் தன்னை ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு, என்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் விடுவதாக கூறி இருந்தார். அந்த புகைப்படங்களின் உண்மை தன்மையை ஆராயாமல், பலரும் சமோக வலைதளைதில் தொடர்ந்து அதனை பகிர்ந்து வருகின்றனர். 

அதனை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்த விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரித்து, சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு போட்டோக்கள் மற்றும் வீடோயோக்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது.

மேலும் இந்த வாழ்க்கை வரும் ஜனவரி மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா புஷ்பா, "மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிர்ந்து உள்ளனர். அது மார்பிங் செய்யப்பட்டது என கூறி மனு அளிக்க சென்றேன். ஆனால் டிஜிபி ராஜேந்திரன் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள நிலையில் கூட இல்லை..அப்படி என்றால், எந்த அளவிற்கு பவர்புல்லா ஒரு டீம் செயல்படுத்துனு பாருங்க....

நான் ஏதோ தைரியமான பெண் என்பதால், மனதளவில் சமாளித்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன்...இதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் என்றோ தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு இருப்பார்...தமிழ்நாட்டில் இது தான் நிலைமை...என்னங்க ஆட்சி நடக்குது இங்க ..? டிஜிபி ராஜேந்திரன் கூட ஒன்னும் செய்ய முடியல...இதுதான் தமிழகத்தின் நிலைமை என சசிகலா புஷ்பா தெரிவித்து உள்ளார். 

click me!