பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு பக்கம்....ஆனால் தமிழக அரசுக்கு மட்டும் எவ்வளவு வரி பணம் கிடைக்குதுன்னு பாருங்க..!

By thenmozhi gFirst Published Sep 19, 2018, 4:31 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருமானம் குவிந்து வருகிறது. தமிழக அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி மூலம் ரூ.15,500 கோடி கிடைக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருமானம் குவிந்து வருகிறது. தமிழக அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி மூலம் ரூ.15,500 கோடி கிடைக்கிறது.

கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ. 85.41 பைசாவகும்,டீசல் ரூ.78.10 பைசாவாகவும் உயர்ந்துள்ளது. நாளக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசலில் உண்மையான உற்பத்திச் செலவைக் காட்டிலும், வரிதான் அதிகமாக இருக்கிறது. ஆனால், வரியைக் குறைத்தால், வருவாய் குறைந்துவிடும் என்பதால், வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் மறத்து வருகின்றன.

அதிகரித்து வரும் விலையைக் கருத்தில்கொண்டு, ராஜஸ்தான், ஆந்திரா, ேமற்குவங்கம், கர்நாடகா அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை தற்காலிகமாகக் குறைத்துள்ளன.

ஆனால், மாநிலங்களைப் பொருத்தவரை பெட்ரோலியப் பொருட்களுக்கு வாட் வரி வருவாய் கடந்த 2016-17-ல் ரூ.1.66லட்சம் கோடியாக இருந்தது, 2017-18-ல் இது ரூ.1.88 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தமிழகத்தில் மத்திய அரசின் உற்பத்தி வரியைக் காட்டிலும் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி அதிகமாக இருக்கிறது. பெட்ரோலுக்கு 32.16 சதவீதமும், டீசலுக்கு 24.08 சதவீதமும் வாட் வரி வசூலிக்கப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசின் உற்பத்தி வரி தவிர்த்து தமிழக அரசு ரூ.21.36 காசுகளும், டீசலுக்கு ரூ.15.45 பைசாவும் வரியாக வசூலிக்கிறது.

மேலும், மத்திய அரசின் உற்பத்தி வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.18 பைசாகவும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.47 பைசாவும் கிடைக்கிறது. இதன்படி ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.29.54 காசுகளும், டீசலில் ரூ.21.92 காசுகளும் வருவாயாகக் கிடைக்கிறது. இந்த விலைவாசி உயர்வால் வரிகளில் மூலம் தமிழக அரசுக்கு ரூ.15,500 கோடி கிடைக்கிறது

click me!