மர்ம நபர்களால் பள்ளிப் பேருந்துக்கு தீ வைப்பு…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
மர்ம நபர்களால் பள்ளிப் பேருந்துக்கு தீ வைப்பு…

சுருக்கம்

வேலூர் மாவட்டத்தில், சி.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் CSI மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து்க்கு மர்ம நபர்களால் தீ வைத்துள்ளனர். இதனால், அந்த பேருந்து  தீயில் எரிந்து கருகியது. 

பேருந்து எரிவதைக் கண்டதும் தீயணைப்புக் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, சிப்காட் தீயணைப்புக் காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பேருந்து முற்றிலும் தீயில் கருகியது.

இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்