குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனை கொன்ற மனைவி…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனை கொன்ற மனைவி…

சுருக்கம்

நாமக்கல்,

நாமக்கல் அருகே, குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (37). இவரது மனைவி கவிதா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

2003-2006 வரை இலண்டன் சென்றிருந்த அழகர்சாமி 6 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பினார். இலண்டனில் இருந்து வரும்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக வந்தார்.

தினமும் மது குடித்து விட்டுவந்து, வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். மேலும், கவிதாவை சரமாரியாக அடித்தும் துன்முறுத்தியும் உள்ளார். இதனால், மனமுலைச்சலுக்கு உள்ளானார் கவிதா.

கடந்த அக்டோபர் 20, 2010 அன்றிரவு குடிபோதையில் வந்த அழகர்சாமி வழக்கம்போல மனைவியை அடித்து துன்புறுத்தி விட்டு தூங்கி விட்டார். இதில், ஆத்திரம் அடைந்த கவிதா வீட்டில் உள்ள கிரைண்டர் கல்லை, அழகர்சாமியின் தலையில் போட்டு அவரை கொன்றுவிட்டார்.

பின்னர், அவர் அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து காவலாளர்கள் கவிதாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் குற்றம் சாட்டப்பட்ட கவிதாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட கவிதாவை காவலாளர்கள் கோவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்