
திண்டுக்கல்
மே தின விழா கொண்டாடிய கையோடு, டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் தங்களுக்கூ கல்வித் தகுதிக்கேற்ப நிரந்தர மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றுக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் சங்கத்தினர் முள்ளிப்பாடியில் இருக்கும் மாவட்ட டாஸ்மாக் சாராயக் கடை அலுவலகம் முன்பு மே தின விழாவைக் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பி.ராமு தலைமை வகித்தார். இவர் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது, “டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்களுக்கு நிரந்த மாற்றுப் பணி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“பதின்மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தர மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்காமல் மாற்றுப் பணி வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடை மாநிலக் குழு உறுப்பினர் மா.கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.