
தேனி
தேனியில் தொழிலாளர் நலத் துறையைக் கண்டித்து ஏடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் ஏடியுசி சார்பில் தொழிலாளர் நலத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் வி.பெத்தாட்சி ஆஸாத் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் என்.ரவிமுருகன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் த.சுந்தரராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் "தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும்.
நல வாரிய முத்தரப்புக் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும்.
கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு நல வாரியங்களை சீரமைக்க வேண்டும்.
உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஏடியுசி-வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.