கட்சி அலுவலகம்.. Laptop, ரப்பர் ஸ்டாம்ப் திருட்டு.. காரணம் பொதுச்செயலாளராம் - மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!

By Ansgar R  |  First Published Mar 19, 2024, 5:24 PM IST

Mansoor Alikhan : பிரபல நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், அவரது கட்சி பொது செயலாளர் கண்ணதாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார். 


இரு தினங்களுக்கு முன்பு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில் கட்சி நிர்வாகிகளோடு கலந்தாலோசிக்காமல், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் அவர்கள், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறியிருந்தார். 

கூட்டணி குறித்த ஆலோசனைகளை நடத்த பொதுச் செயலாளருக்கு உரிமை உள்ளதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இது ஒரு புறம் இருக்க, கண்ணதாசன் தனது கட்சியின் பொதுச்செயலாளர் அல்ல என்றும் அவர் ஒரு ஆபீஸ் பாயாகத்தான் தனது அலுவலகத்தில் வந்து சேர்ந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் மன்சூர் அலிகான். 

Tap to resize

Latest Videos

சேலம் பொதுக்கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் மோடி.. ஆடிட்டர் ரமேஷுக்கு நா தழுதழுக்க அஞ்சலி..

மேலும் பதில் அறிக்கை ஒன்றில் நடிகர் மற்றும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் "தனது கட்சி அலுவலகத்தில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லேப்டாப், கட்சியின் லெட்டர் பேட் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை கண்ணதாசன் திருடி விட்டதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். 

இதனால் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுச்செயலாளர் கட்சியின் தலைவரை நீக்குவதும், கட்சி தலைவர் பொதுச்செயலாளர் மீது போலீசில் புகார் அளிப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே தொகுதியில் 100 வயதைக் கடந்த 1049 வாக்காளர்கள்! சூப்பர் சீனியர் ஓட்டுகளை அள்ளப்போவது யார்?

click me!