
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒன்பது இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.உலகநாதன் தலைமை தாங்கினார்.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், இராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.ஜோசப் தலைமை தாங்கினார்.
மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.உலகநாதன் மற்றும் எம்.சிவஞானம் தலைமை தாங்கினர்.
எழிலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எம்.வையாபுரி தலைமை தாங்கினார்.
கொக்கலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். ஞானமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைக்காடு கூட்டுறவு வங்கி முன்பு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே. ராஜாவும்,
திருத்தங்கூர் கூட்டுறவு வங்கி முன்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயபாலும்,
கச்சனம் கூட்டுறவு வங்கி முன்பு ஒன்றிய துணைச் செயலாளர் பாலுவும்,
ஆதிரெங்கம் கூட்டுறவு வங்கி முன்பு மாவட்டக் குழு உறுப்பினர் பி.வி.ரெத்தினசாமியும் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
தடுப்பணைகள் கட்டும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா அரசுகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.