ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கம்? மறுவாக்குப்பதிவு நடத்துங்கள்.. அண்ணாமலை.!

By vinoth kumar  |  First Published Apr 20, 2024, 7:01 AM IST

கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.


கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என அண்ணாமலை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், ஒரே கட்டமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரபலங்கள் உள்ளிட்டோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். ஆனால், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த தேர்தலில் வாக்களித்த எங்களுக்கு இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி புகார் கூறினர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள் தோற்க வேண்டும் - புகழேந்தி

இந்நிலையில், தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கோவையில் எங்களது கணிப்பின் படி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 20 பெயர்கள் இல்லை. உயிரிழந்த கணவருக்கு வாக்கு உள்ளது. ஆனால், உயிரோடு இருக்கும் மனைவிக்கு வாக்கு இல்லை. 

கோவையில் கடந்த 40 ஆண்டுகளாக வாக்களித்து வந்தவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.  அந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

click me!