தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு தகவல்!

By Manikanda Prabu  |  First Published Apr 19, 2024, 8:56 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது


நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்பு வந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 6 மணிக்கு முன்பாக வந்தவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Latest Videos

இதனிடையே, தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Loksabha election 2024 பரந்தூர், வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

தமிழ்நாட்டில் இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட காத்திருப்பதால் ஏழு மணி நிலவரப்படி, மொத்தம் 72.09 சதவீத  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமூகமான முறையில் தேர்தல் நடத்து முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு 69 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்தமுறை தற்போது வரை 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர் நாளை நண்பகல் 12 மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

click me!