மதுரையில் பரபரப்பு..ஆளுநர் குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் இழிவு பேச்சு.. அதிமமுக தலைவர் அதிரடி கைது..

By Thanalakshmi V  |  First Published Apr 25, 2022, 11:30 AM IST

தமிழக ஆளுநர் குறித்து அருவருக்கதக்க வகையில் பேசிய புகாரில் மதுரை சேர்ந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன். இவர் மதுரையில் பிபி.சாவடி பல்லவன் நகர் 3-வது தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனியார் டிவியின் யூடியூப் சேனலுக்கு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பேச்சி ஒன்று அளித்துள்ளார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து மோசமான முறையில் பேசியுள்ளார். 

மேலும் கண்ணியக் குறைவாக, இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அருவருக்கதக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு சமூக ஊடகப் பிரிவு சார்பு ஆய்வாளர் அளித்த புகாரில் தற்போது வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டி கலகம் ஏற்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Tap to resize

Latest Videos

அதன்பேரில், கலவரத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே பசும்பொன்பாண்டியன் மீது ஏற்கெனவே கரிமேடு, அண்ணா நகர், செல்லூர், திலகர் திடல், புதூர், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ். காலனி உள்ளிட்ட காவல் நிலையங் களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

click me!