நடிகர்கள் மீதான அவதூறு வழக்குக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Published : Jun 13, 2017, 02:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
நடிகர்கள் மீதான அவதூறு வழக்குக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

Defamation case on actors ban - High Court order

கடந்த 2009ம் ஆண்டு பிரபல நாளிதழில் நடிகர்கள், நடிகைகள் பற்றி செய்தி வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து பத்திரிகையில் செய்தி வெளியாதற்காக நடிகர் சூர்யா, சத்யாராஜ் உள்பட பலரும் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.

இதுகுறித்து உதக மண்டலத்தை சேர்ந்த ரோசாரியா என்பவர், உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சூர்யா உள்பட 8 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடு மனு நீதிபதி முரளிதரன், முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தார். மேலும், இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!