முட்டிக் கொண்ட தீபா – சசிகலா டீம்; அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் அலார்ட்..

 
Published : Feb 10, 2017, 10:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
முட்டிக் கொண்ட தீபா – சசிகலா டீம்; அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் அலார்ட்..

சுருக்கம்

அரியலூர்,

அரியலூரில் தீபா – சசிகலா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு உருட்டுக் கட்டையால் தாக்குவது தொடர்வதால் பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போன்ற இடங்களில் அசம்பாவிதங்கள நடைபெறாமல் இருக்க காவலாளர்காள் பாதுகாப்பில் இருக்கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியலூர் முன்னாள் அதிமுக. எம்எல்ஏ இளவழகன் தலைமையில் ஜெ.தீபா பேரவை உருவாக்கப்பட்டது.

மேலும் இராஜாஜி நகரில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டு ஆதரவுகளை திரட்டி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஜெயலலிதா சமாதியில் வைத்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது புகார் அடுக்கடுக்காகத் தெரிவித்தார். மேலும் அவர் தீபாவை அரசியலுக்கு கொண்டு வருவோம் என்றும் பேட்டியளித்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தலைமையில் ஜெ.தீபா ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அங்கு சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது சசிகலாவின் உருவபொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர். அவர்கள் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், சசிகலாவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தமிழக அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைகளில் உருட்டு கட்டைகளுடன் பேருந்து நிலையத்துக்கு ஓடி வந்தனர்.

சசிகலா உருவபொம்மையை எரித்த ஜெ.தீபா ஆதரவாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாலர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இந்த தாக்குதலில் ஜெ.தீபா ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
இந்தி எதிர்ப்பு போராட்டம்... இதுவரை வெளிவராத ஆவணங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!