தொடங்கியது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்.... அடக்கும் வீரர்கள்…!!

 
Published : Feb 10, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
தொடங்கியது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்.... அடக்கும்  வீரர்கள்…!!

சுருக்கம்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம்  தடை விதித்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.

இதனையடுத்து சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வரலாறு காணாத போராட்டத்திற்கு பயந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு பகுதிளகளில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று துவங்கியது. 980 காளைகளும், 1650 காளையர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பார்வையிட்ட வருகிறார்.

முன்னதாக மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து விழா குழு சார்பில் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு கோவில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டன.


ஜல்லிக்கட்டுக்காக  இலங்கையிலிருந்து 3 காளைகளை, அந்நாட்டு அமைச்சர் கூட்டி வந்துள்ளனர்.தற்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கார், பைக், டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் காளையர்களுக்காக காத்திருக்கின்றன.,

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!