RE EXAM: 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு தேர்வு எப்போது.? மார்க் சீட் எப்போது கிடைக்கும்.?

By Ajmal KhanFirst Published May 10, 2024, 10:11 AM IST
Highlights

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை முதல் விண்ணப்பிக்லாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு

10ஆம்வகுப்பு தேர்வு முடிவானது இன்று காலை வெளியிடப்பட்டது. அதன் படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 47ஆயிரத்து 0 61 பேராகும், இதே போல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 பேர் தேர்வு எழுதினர். இதில்  தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் ஆகும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம் ஆகும். மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்விஅடைந்தவர்களுக்கு மறு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

மறு தேர்வு தேதி அறிவிப்பு

அதன்படி மறுதேர்வானது ஜூலை மாதம் இரண்டாம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான கால அட்டவணை நாளை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழானது வருகின்ற 13 ஆம் தேதியிலிருந்து இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல் வழங்கும் பணியானது முதல் முறையாக நடைபெற உள்ளதாகவும், இதற்காக வருகின்ற 15-ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல மறு கூட்டலுக்கு நாளை முதல் வருகின்ற 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 10th exam result 2024 : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.! தேர்ச்சி விகிதம் 91.55% - மாணவிகளே சாதனை

click me!