வெளுத்து வாங்கும் மழை... பெங்களூரில் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள்-ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய சென்னை

By Ajmal KhanFirst Published May 10, 2024, 8:40 AM IST
Highlights

இடி மின்னலோடு நேற்று இரவு கனத்த மழை பெய்த காரணத்தால் பெங்களூரில் விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கன மழை- தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்

வெயிலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்பவும் கூலிங்காக காணப்படும் பெங்களூரும் வெயிலின் தாக்கத்தில் அனல் கக்கி  வருகிறது. இந்தநிலையில் கோடை மழையானது பல இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. நேற்று இரவு பெங்களூர் பகுதியில் இடி, மின்னலோடு கன மழையானது பெய்தது. இதன் காரணமாக சிங்கப்பூர், டெல்லி, ராஞ்சி, கோவா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. வானிலை மோசமாக இருந்த காரணத்தால் வானத்திலேயே விமானங்கள் நீண்ட நேரம் வட்ட்ம அடித்துக்கொண்டிருந்தது.

சென்னையில் தரையிறங்கிய விமானங்கள்

ஒரு கட்டத்திற்கு பிறகு பெங்களூருக்கு அருகில் இருக்க கூடிய சென்னை விமான நிலையித்திற்கு விமானங்கள் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. சென்னை விமான நிலையமும் அனுமதி கொடுக்கப்பட்டதையடுத்து பெங்களூரில் தரையிறங்க வேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து விமான பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் விநியோகப்பட்டது. பெங்களூரில் வானிலை சீரானதும் விமானங்கள் அடுத்துடுத்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. 

vegetables: உயர்ந்ததா தக்காளி,வெங்காயத்தின் விலை.? கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன தெரியுமா.?

click me!