
பிளாஸ்ட்டிக் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்…அது 12 சிகரெட் பிடித்தற்கு சமம் என்கிறது சுற்றுச் சூழல்துறை…அதிர்ச்சி ரிபோர்ட்….
பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் பொருட்கள் உடலுக்கு தீங்க விளைக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே.ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத நிலையே என்பது தற்போதைய நிலை.
இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் போன்றவற்றால் பெரும் தீங்கு ஏற்படும் என்றும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பிளாஸ்டிக் கப்பில் டீ குடித்தால் அது 12 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்றும் சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.