நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்.. செல்போனுக்கு வந்த அபாய ஒலி எச்சரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

Published : Oct 20, 2023, 01:54 PM ISTUpdated : Dec 15, 2023, 01:18 AM IST
நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்.. செல்போனுக்கு வந்த அபாய ஒலி  எச்சரிக்கை.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியது.

பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்பு அளிப்பது குறித்து நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை ஓலியுடன் அனைவரது செல்போனுக்கும் 11 மணியளவில் குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. 

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகாலத் தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டத்தை இன்று நடத்தியது.

இதையும் படிங்க;- இன்று உங்க செல்போனுக்கு திடீர் அபாய ஒலி வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. தமிழக அரசு முக்கிய தகவல்.!

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை என்பது இயற்கை பேரிடர் காலங்களில் மழை பொழிவு அதிகளவில் இருந்தாலோ, வெள்ள அபாய எச்சரிக்கை, சுனாமி, பூகம்பம்  ஏற்படப் போகிறதென்றால் ப்ராட்கேஸ்டிங் சிஸ்டம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுப்பார்கள். ஒரே நேரத்தில் அனைவருக்கும் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. சேப்பாக்கத்தில் இருக்கும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகள் இதனை சோதனை அடிப்படையில் மேற்கொண்டனர்.  இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசும் இணைந்து இந்த சோதனையை இன்று மேற்கொண்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முதலில் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து தமிழில் அனுப்பப்பட்டது. அதில், இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்