6 மாத சிறை தண்டனை... 15 நாட்களில் சரணடைய வேண்டும்- நடிகை ஜெயப்பிரதாவிற்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

Published : Oct 20, 2023, 12:25 PM ISTUpdated : Oct 20, 2023, 12:40 PM IST
6 மாத சிறை தண்டனை... 15 நாட்களில் சரணடைய வேண்டும்- நடிகை ஜெயப்பிரதாவிற்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

சுருக்கம்

திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை உரிய முறையில் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவிற்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்திய சினிமாவை கலக்கிய ஜெயப்பிரதா

இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. ரஜினி கமல் ஆகியோருடன் இணைந்து நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி,தசாவதாரம்  போன்ற படத்தில் ஜெயப்பிரதா நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்தவர் ஜெயப்பிரதா, பரபரப்பாக சினிமா மற்றும் அரசியலில் ஈடுபட்ட ஜெயப்பிரதா சென்னை ராயப்பேட்டையில் ஜெயப்பிரதா என்னும் திரையரங்கத்தையும் நடத்தி வந்தார். 

ஜெயப்பிரதா மீது வழக்கு

  சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலை அருகில் ஜெயப்பிரதா என்கிற திரையரங்கை நடத்தி வந்த போது, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

15 நாட்களில் சரணடைய உத்தரவு

இந்த  மனுவை நீதிபதி ஜி.ஜெயசந்திரன், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்துக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!- எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!