டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளிலும் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
டிசம்பர் 3-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் டிசம்பர் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வரும் 3-ம் தேதி புயல் உருவாகக்கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு அந்தமான பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்றும் வானிலை மையம் உறுதி செய்துள்ளது. டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி இந்த புயல் வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச.3ம் தேதி தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்.. எந்தெந்த இடங்களில் மிக கனமழை பெய்யும்?
இந்த புயல் காரணமாக இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அந்தமான கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். வரும் 3, 4 ஆகிய தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு கடல் பகுதிளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 70 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.