தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும் மாண்டஸ்.! மாமல்லபுரத்தில் இன்று இரவு கரை கடக்கிறது.! வானிலை மையம்

By Ajmal KhanFirst Published Dec 9, 2022, 9:42 AM IST
Highlights

தீவிர புயலான மாண்டஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிலந்து இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் புயல்

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மாண்டஸ் புயஸ் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக்கூடும், இன்று நள்ளிரவு தொடங்கி புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

நெருங்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

 கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு உள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கரையை கடக்கும் பொழுது 65 லிருந்து 70 கிலோமீட்டர் வேகத்தை காற்றின் வேகம் இருக்கும், மேலும், புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இதனிடையே செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

5 அடி உயரத்திற்கு எழும் ஆக்ரோஷமாக அலைகள்..! படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற மீனவர்கள்

click me!