நெருங்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

By vinoth kumar  |  First Published Dec 9, 2022, 9:28 AM IST

தீவிர புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கில் சுமார் 240 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 


மாண்டஸ் புயல் காரணமாக இன்று  செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தீவிர புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கில் சுமார் 240 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.  அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இப்புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி… அரசு பேருந்துகள் இயங்காது… விமான சேவையிலும் மாற்றம்!!

undefined

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை ஏற்பட போகிறது தெரியுமா?

click me!