ஃபெஞ்சல் புயல் வட தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. புயல் மீண்டும் உருவாகி தென் மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று கடந்த வாரம் வானிலை மையம் கணித்திருந்தது. எனினும் இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 29-ம் தேதி ஃபெஞ்சல் புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்தது.
முதலில் புயல் கரையை கடக்கும் முன்பு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி கடந்த 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்ச புயல், இரவு 11.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
புயல் கரையை கடந்த தினமான 30-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர் கொடுக்கப்பட்டது. அன்றைய சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வெளுத்து வாங்கியது.
ஆனால் புயல் கரையை கடக்க தொடங்கிய போது சென்னை கனமழை குறைந்து பலத்த காற்று வீசத் தொடங்கியது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வரை பலத்த காற்று வீசியதாகவும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்தில் வீசியதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.
புயலுக்கு பிறகு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புதுச்சேரியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் இந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின.
திருவண்ணாமலையில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். அதே போல் விழுப்புரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெயத் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.
இதனிடையே வட கடலோர மாவட்டங்கள் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர், சேத விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.2000 கோடி நிவாரணி நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.
தவிக்கும் 1.5 கோடி மக்கள்; 2000 கோடி நிதி கேட்டு மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
இதனிடையே மற்ற புயல்களில் இருந்து ஃபெஞ்சல் புயல் ஏன் தனித்துநிற்கிறது என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த புயல் து வட தமிழகப் பகுதி முழுவதும் மிக மெதுவாக நகர்ந்து அரபிக் கடலில் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஃபெஞ்சல் மெதுவாக நகர்ந்த காரணத்தினால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, #திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற இடங்களில் 50 செ.மீ.க்கு மேல் அதி தீவிர மழை பெய்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். காற்றின் வேகம் குறிப்பாக வலுவாக இல்லை என்றாலும், இந்த கடுமையான மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது. பொதுவாக வலுவான புயல்கள் மெதுவாக நகரும், குறைந்த தீவிரம் கொண்ட புயல்களை போல அதிக மழைப்பொழிவை உருவாக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக, புயல்கள் கரையைக் கடந்த பிறகு விரைவில் வலுவிழந்துவிடும். இருப்பினும், இது சிறிது காலத்திற்கு அதன் கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொண்டது, மேலும் அதன் மேற்கு சுற்றளவு அதன் பாதையில் குறிப்பிடத்தக்க மழையை தொடர்ந்து அளித்தது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பே இன்னும் நீங்காத நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் காசர்கோடு பகுதிக்கு சென்றுவிட்டதாகவும், இந்த புயல் மீண்டும் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி கன மழையால் தத்தளிக்கும் 8 மாவட்டங்கள்.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டிசம்பர் 13 – டிசம்பர் 25-ம் தேதிக்கு இடையே ஃபெஞ்சல் 2 புயல் உருவாகக்கூடும் என்றும் இந்த முறை தென் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்படக்கூடும் எனவும் இதனால் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.