சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில், ட்விட்டர் பக்கத்தில் வதந்தியை பரப்பியது தொடர்பாக விசாரணைக்கு சூர்யாவை ஆஜராக சிதம்பரம் போலீசார் அழைத்தனர்.
சென்னையை சேர்ந்த எஸ்.ஜி சூர்யா தமிழக பாஜகவின் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை எம்பி வெங்கடேசன் குறித்தும் ட்விட்டர் வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாக இவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மதுரை போலீசார் அவரை கைது செய்தனர், இதனை தொடர்ந்து ஜாமீனுக்காக மனு அளித்த எஸ்.ஜி சூர்யாவிற்கு மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தினமும் காலை நேரில் வந்து 30 நாட்கள் தொடர்ச்சியாக கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
இதையும் படியுங்கள் : லாரி மோதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடல் நசுங்கி பலி!
சுமார் பத்து நாட்கள் மதுரையில் தங்கி இருந்த கையெழுத்திட்டு வந்த சூர்யா தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் இருந்து தளர்வு வேண்டும் என்று கூற அதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த சூழலில் தான் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் ட்விட்டர் பக்கத்தில் வதந்தியை பரப்பியது தொடர்பாக விசாரணைக்கு சூர்யாவை ஆஜராக சிதம்பரம் போலீசார் அழைத்தனர்.
ஆனால் அன்று முதல் சூர்யா தலைமறைவாக இருப்பதாகவும், ஆகவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜமீனை நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : அமைச்சரே மனம் புண்படும்படி பேசுவது நியாயமா? மா.சு.க்கு எதிராக சீறும் OPS