காவிரியில் தமிழகத்திற்கு அக்டோபர் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்துவிட வலியுறுத்தி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கர்நாடகா அரசு சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனைத் தொடர்ந்து காவிரியில் வருகின்ற 16ம் தேதி முதல் இம்மாதம் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.