
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின் ஒயர் கோளாறே காரணம் என்று தமிழ்நாடு மின்வாரியத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வடபழனி தெற்குசிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்பெட்டியில் ஏற்பட்ட கசிவே விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விபத்து நேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிகாரிகள், மினசாரத்துறையின் கேபிள்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், மின் ஒயர் கோளாறே விபத்திற்கான காரணம் எனறும் கூறினார்.