
மணல் உள்ள தடை விதிப்பதற்கு 3 ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும் என்றும் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் மணல் அள்ளுவதை தடை செய்யப்படும் என்றும், தமிழக அரசே மூன்று ஆண்டுகளுக்கு மணல் குவாரியில் இருந்து சப்ளை செய்யும் என்று அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்
ஆற்று மணலை கொள்ளை அடிப்பதில் திமுக மற்றும் அதிமுக காட்சிகளைடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும், மணல் கொள்ளைக்கு இந்த இரு கட்சிகளுக்குமே முழுப்பங்கு உண்டு என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து தான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று எடப்பாடி சொல்லுவதை சொல்லுவதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் வர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் மணல் கொள்ளை மிக அபரிமிதமாக நடந்ததன் காரணமாகத்தான் தான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் இல்லாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மணலுக்கு பதிலாக எம்சண்டு உபயோகப்படுத்த வேண்டும் என்று இப்பொழுது சொல்லுவது கண்கட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்கிற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் மணல் இருக்கிற பெருவாரியான இடத்தில் அள்ளி முடித்து விட்டு, முதலமைச்சர் முதல் கவுன்சிலர் வரை மணல் கொள்ளை அடித்து இன்றைக்கு தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு நல்லவர்கள் போல் பேசுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகள் கழித்து மணல் அள்ளுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று சொல்வதை விட்டுவிட்டு, உடனடியாக மணல் அள்ளுவதை தடுத்து, தமிழகத்தை வறட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.