
விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள அரசு தாய்சேய் நல மையத்தில் சேதமடைந்த சுவிட்சைத் தொட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சென்னை கொரட்டூரில் 2 சிறுமிகளும் திருவாரூர் மாவட்டம் மணலகரம் கிராமத்து விவசாயி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து மின்சாரத்துறையின் அலட்சியம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின் பெட்டி சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள அரசு தாய்சேய் நல மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அங்கிருந்த சுவிட்ச் போர்டை தொட்டுள்ளான். அந்த சுவிட்ச் போர்டு சேதமடைந்திருந்ததால், ஷாக் அடித்து சிறுவன் உயிரிழந்தான்.
சுவிட்ச் போர்டு சேதமடைந்திருந்ததை அதிகாரிகளும் ஊழியர்களும் கண்டுகொள்ளாமல் இருந்ததே சிறுவனின் உயிரிழப்புக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.