கடலோர மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் இரவில் விட்டு விட்டு இடியுடன் மழை..! வானிலை மையம் தகவல்..!

Asianet News Tamil  
Published : Nov 04, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
கடலோர மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் இரவில் விட்டு விட்டு இடியுடன் மழை..! வானிலை மையம் தகவல்..!

சுருக்கம்

coastal areas will get rain on next 24 hours said meteorological centre

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டத்தில்  ஒரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், தென்மேற்குவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரைவரை நிலவி வருவதாக தெரிவித்தார்.

எனவே அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் விட்டு விட்டு கனமழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என பாலசந்திரன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

தவெகவிற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்து பேசிய கார்த்தி சிதம்பரம்!
இதைக்கூட செய்ய முடியலனா அப்புறம் எதுக்கு முதல்வர் பதவி..! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!