
சென்னையில் மிதமான அல்லது சாரல் மழையுடன் இந்த வார இறுதி நமக்கு இருக்கும் என்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சி நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்தால் பொது மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு போல் மேலும் ஒரு சம்பவம் நடந்து விடக் கூடாது என் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதில் நான் முந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல், டெல்டா பகுதியில் இருந்து மிகப்பெரிய மேக்கூட்டம், சென்னை அருகே வந்துவிட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர்., தென் சென்னையில் இந்த மேகக்கூட்டங்கள் மூலம், நமக்கு நல்ல மழை கிடைக்கும். இந்த வார இறுதி நமக்கு சூப்பர் பருவமழையாக இருக்கப்போகிறது. சென்னை முழுவதும் கன மழை இல்லாமல், சாரல் மழையுடன் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
. இந்த மழை தென்சென்னை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சென்னையைிலும் பெய்யும் அளவுக்கு பரவாலாக இருக்கும்.அதேசமயம், அடர்த்தியான மேகக்கூட்டங்கள் ராடரில் தெரியும் பட்டசத்தில் அதன் மூலம், வடசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே இனி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.