
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், பயங்கரவாதிகளின் தொடர்பு வைத்துள்ளவர்களுக்கு மரண அடி விழுந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஈரோட்டில் பா.ஜ.க. சார்பில் பெருந்துறையில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொண்டார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் நிரந்தர வளர்ச்சியை நோக்கி நாட்டை அழைத்து செல்கிறார். அந்த வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் கொண்டு வரும் நடவடிக்கையாக, அவற்றை செல்லாத பணமாக அறிவித்தார். இது மக்களின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை பதுக்கி இருப்பவர்கள் மற்றும் பயங்கரவாதிகளோடு தொடர்பு இருப்பவர்களுக்கு இது மரண அடியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.