கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! தொடர் மழையால் காரைக்காலிலும் பள்ளிகள் இயங்காது!!!

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 07:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! தொடர் மழையால் காரைக்காலிலும் பள்ளிகள் இயங்காது!!!

சுருக்கம்

school leave

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை  தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் எங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெது வருகிறது.

இந்த தொடர்மழையால் கடந்த வாரம் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதாலும், தண்ணீர் தேங்கிக் கடந்த பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தவும், மாணவர்களின் சுகாதார நிலை கருதியும் இன்று 5 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: ரூ.1,950-க்கு விமான டிக்கெட்.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சலுகை