தினத்தந்தி நாளிதழுக்கு பவளவிழா …. சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி !!!

 
Published : Nov 06, 2017, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
தினத்தந்தி நாளிதழுக்கு பவளவிழா …. சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி !!!

சுருக்கம்

prime minister modi wil participate today in daily thanthi function

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள  தினத்தந்தி பிரதமர் நரேந்திர மோடி  பங்கேற்று பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார்.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று  தினத்தந்தியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.



அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

பின்னர் காலை 10 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 10.20 மணிக்கு மெரினா கடற் கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு வருகிறார்.

இந்த விழாவில் தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். மேலும், விருதுகளை வழங்கி உரையாற்றுகிறார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு