சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களில் தொடரும் மழை !! 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை !!!

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 06:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டங்களில் தொடரும் மழை !! 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை !!!

சுருக்கம்

rain continue....chennai. nagai and 4 districet school leave

தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், நாகை  மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமசூ தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் எங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழை பெது வருகிறது.

இந்த தொடர்மழையால் கடந்த வாரம் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் . திருவாரூர  மற்றும் நாகை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதாலும், தண்ணீர் தேங்கிக் கடந்த பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தவும், மாணவர்களின் சுகாதார நிலை கருதியும் இன்று 5 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இன்று பள்ளி வளாகங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

திருத்தணியில் ரத்த வெள்ளத்தில் கதறிய வடமாநில இளைஞர்.. விடாத புள்ளிங்கோ.. தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
துணைவேந்தரை நியமனம்.. 3 ஆண்டுகள் டேபிளில் வைத்திருந்த மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர்